சிம்பிளான தந்தூரி சிக்கன் ரெசிபி

Loading...

சிம்பிளான  தந்தூரி சிக்கன் ரெசிபி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
ஊற வைப்பதற்கு.. தயிர் – 1 கப் வெங்காயம் – 1 எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 2 பற்கள் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 2 கரம் மசாலா – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கேசரி பவுடர் – 1 சிட்டிகை எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும். பின்னர் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கெட்டியான பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி, 30-40 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை வைத்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின் திறந்து சிக்கனை மறுபக்கம் திருப்பி விட்டு 10-15 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து சிக்கனையும் வேக வைக்க வேண்டும். இப்போது தந்தூரி சிக்கன் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply