சிக்கன் லெக் பீஸ் வருவல்

Loading...

சிக்கன் லெக் பீஸ் வருவல்
தேவையான பொருட்கள்

சிக்கன் லெக்பீஸ் – முக்கால் கிலோ தயிர் – 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் பச்சை மிளகாய் – 3 நறுக்கிய மல்லி இலை – சிறிதளவு எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
லெக் பீஸ் கறி செய்முறை

சிக்கன் லெக் பீஸ் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்து, லேசாக கீறிக்கொள்ளவும். அத்துடன்,தயிர்,மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சிப் பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி வரும்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இத்துடன் கரம் மசாலா சேர்த்து கிளறவும். இந்த கலவையில் நறுக்கிய தக்காளி சேர்த்து பேஸ்ட் போல ஆகும் வரை வதக்கவும். இதில் மிளகாய்,மல்லி இலை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கிளறவும். கூட்டு போல் ஆனவுடன் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விடவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும், லேசாக தண்ணீர் தெளித்து வேகவிடவும். அடுப்பை மீடியமாக வைக்கவும். மூடி போட்டு கால் மணி நேரம் வேக வேண்டும், இடையில் திறந்து கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். சிக்கன் கூட்டோடு சுருண்டு எண்ணெய் மேலெழும்பி வரும் போது அடுப்பை நிறுத்தவும். வறுவல் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply