சிக்கன் லாலிபாப்

Loading...

சிக்கன் லாலிபாப்
தேவையான பொருட்கள்:
சிக்கன் விங்ஸ் – 1/2 கிலோ (தோல் நீக்கப்பட்டது) எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் வினிகர் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் அஜினமோட்டோ – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
மாவிற்கு…
மைதா – 6 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 6 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் முட்டை – 1 அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு நிற கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் விங்ஸை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிக்கன் விங்ஸை எடுத்து, அதனை கத்தியால் கீறி, அதன் நடுலே உள்ள ஒல்லியான எலும்பை நீக்கிவிட்டு, நல்ல தடிமனான எலும்பின் ஒரு பக்கமாக, சதைப்பற்றைக் கொண்டு வர வேண்டும். இதுப்போன்று அனைத்து சிக்கன் விங்ஸையும் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு கெட்டியான மாவாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். சிக்கனானது 2 மணிநேரம் நன்கு ஊறியப் பின்னர், ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வொரு சிக்கன் துண்டையும் பிசைந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply