சிக்கன் பாஸ்தா ரெசிபி

Loading...

சிக்கன் பாஸ்தா ரெசிபி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கப் (சிறு துண்டுகளாக்கப்பட்டது) பாஸ்தா – 250 கிராம் (வேக வைத்தது) பூண்டு – 6-7 பற்கள் (தட்டியது) சீஸ் – 1/4 கப் க்ரீம் – 1/2 கப் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் பால் – 3-4 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து வாணலியை மூடி 15 நிமிடம் சிக்கன் துண்டுகளை வேக வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு பௌலில் சோள மாவு, மற்றும் சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து, சிக்கன் வெந்துவிட்டதா என்று பார்த்து, சிக்கன் வெந்ததும், அதில் க்ரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கலவை நன்கு கெட்டியாக வரும் வரை கிளறி விட வேண்டும் கலவையானது கெட்டியானதும், அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும். பின் அதில் சீஸ் போட்டு, தீயை குறைவில் வைத்து, சீஸை உருக வைக்க வேண்டும். இறுதியில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டுமாறு பிரட்டி, மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply