சிக்கன் கறி தோசை

Loading...

சிக்கன் கறி தோசை

தேவையான பொருட்கள்:
தோசை மாவு – 1 கப்

கறி மசாலா செய்ய:
சிக்கன் கொத்துக்கறி – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – 50 கிராம் தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீ ஸ்பூன் சீரகபொடி – 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி தழை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு சோம்பு, பட்டை தாளிக்க சிறிதளவு உப்பு தேவையான அளவு

மசாலா செய்முறை
சிக்கனை பொடியாக நறுக்கி வாங்கவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து கிரேவியாகும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும். அப்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கறி தோசை செய்முறை
ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவலாக போட்டு மாவை சுற்றி எண்ணெய் ஊற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூடான கறி தோசை ரெடி. இதனை சிக்கன் குழம்புடன் சாப்பிடலாம். இந்த கறிதோசையில் சிக்கனுக்கு பதிலாக மட்டன் சேர்த்தும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply