சிக்கன் கட்லெட் ரெஸிபி

Loading...

14-chicken-cutlet-300

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் -200 கிராம் ப்ரட் துண்டுகள் -6 பெரிய வெங்காயம் -1 பச்சைமிளகாய் -2 மல்லி இலை -சிறிதளவு மிளகாய்தூள் -1 டீஸ்பூன் மஞ்சள்தூள் -1 டீஸ்பூன் எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கட்லெட் செய்முறை ப்ரட்டை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கனை உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து பொடியாக கொத்திக் கொள்ளவும். ப்ரட், சிக்கன், இவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி இலை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனை வேண்டிய வடிவில் கட்லட் போல செய்து எண்ணெயிலிட்டுப் பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தோசை தவாவில் வைத்து மேலோட்டமாக எண்ணெய் ஊற்றி பொரித்துக் கொள்ளவும். சுவையான சிக்கன் கட்லெட் ரெடி. தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம். விடுமுறை கால மாலை நேர சிற்றுண்டி இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply