கோவைக்காய் பொரியல்

Loading...

கோவைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:
கோவைக்காய் – 2 கப் (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு… தக்காளி – 1 (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது) சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…
எண்ணெய் – 3 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 3/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, சோம்பு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும். பிறகு அதில் காய்கறியை சேர்த்து, 2 நிமிடம் மசாலா காய்கறியுடன் ஒன்று சேர நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, காய்கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, காய்கறி நன்கு வெந்ததும், தண்ணீர் வற்ற நன்கு கிளறி விட்டால், கோவைக்காய் பொரியல் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply