கோடையில் உதடு வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்பு

Loading...

கோடையில் உதடு வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்புகோடை வெயில் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சருமத்தை பாதுகாக்க தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

உதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:

படுப்பதற்கு முன்பு பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவ வேண்டும். அப்படியே மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு காட்டனில் பன்னீரை நனைத்து துடைக்கவும். பீட்ரூட் காய்களை நறுக்கும்போது அதன் தோலை நாம் நீக்குவோம். அந்த தோலை உதட்டில் தேய்த்தால் நாளடைவில் உதட்டில் உள்ள வெடிப்பு நீங்கி ரோஜா இதழ்கள் போல் நிறம் மாறி உதடுகள் மென்மையாக காணப்படும்.

வறண்ட சருமத்தை போக்க :

அதிகமாய் வறண்டு போன சருமத்துக்கு தேன் கலந்த முக பேக் நல்லது. இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி பவுடர் போட்டு நன்றாக பேஸ்ட் போல் குழைத்துவிடவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். படுப்பதற்கு முன்பு வாஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி முகம் மென்மையாக மாறும்.

கால்களில் உள்ள வெடிப்புகள் நீங்க :

காலில் பித்த வெடிப்பு இருந்தால் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால் பித்த வெடிப்பு, கால் வலி நீங்கிவிடும்.அல்லது வெதுவெதுப்பான நீரில் தேங்காய்ப்பால் சிறிதளவு, ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர், உப்பு, ஆகியவற்றை கலந்து அதில் கால்களை முழங்கால் வரை விட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் குளிர்ந்த நீர்க்கட்டி (ஐஸ் ஸ்கியூப்) கொண்டு பாதத்திலிருந்து முழங்கால் வரை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்வதால் நாளடைவில் வெடிப்பு நீங்கி பூ போன்ற பாதங்களாக மாறும்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply