கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் குடிங்க

Loading...

கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் குடிங்ககோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் குடிப்பது மிகவும் நல்லது.
* மோர் கலோரி சத்தில் குறைந்த அளவு கொண்டது. அவசியமான சத்துக்களைக் கொண்டது. வைட்டமின் பி 2, கால்ஷியம், பாஸ்பரஸ், போப்ளேவின் போன்றவை மோரில் உள்ளன. ஆரோக்கயமான எலும்புகள், சருமம் நோய் எதிர்ப்பும் சக்தி ஆகியவை மோரின் சாதனைகள், தினம் ஒரு பெரிய க்ளாஸ் அளவு தினமும் மோர் அருந்துவது பல சத்துக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். இரு வேளை உணவுக்கு நடுவே இதனை அருந்துவது பசியை நீக்கி ஒரு சிறிய சத்துள்ள உணவாய் செயல்படும்.
* நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. பல கிருமிகளின் பாதிப்பினை குடலிலிருந்து நீக்குகின்றது. சளி, ஜலதோஷம் இவற்றினை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுவது.
* நெஞ்செரிச்சலை நீக்கும் கனமான உணவு எடுத்துக் கொண்டால் மோர் குடித்தால் வயிற்று தொந்தரவு நீங்கும். ஆசிரட்டி தொந்தரவு அடியோடு நீங்கும்.
* கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் வெகுவாய் உதவுகின்றது. மாதாவிடாய் நிற்கும். மாத விடாய் நிற்கும் பெண்கள் தினம் மோர் குடிப்பது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
* மோர் குடித்த பின் நெடு நேரம் பசிக்காது. இது ஒருவரின் எடை குறைப்பிற்கு மிகவும் உதவும். மேலும் குடல் சுத்தமாயிருக்க மலச்சிக்கல் இன்றி இருக்க வெகுவாய் உதவும்.
* சிறிதளவு மோரினை தலையில் தடவி 20 நிமிடங்கள் பொறுத்து தலைமுடியினை நன்கு அலசுங்கள். பளபள வென்ற மென்மையான தலைமுடி உங்களுக்கே.
* இதே போன்ற உடலில் மோர் பூசி 15 நிமிடம் கழித்து குளிக்க சருமம் மென்மையாகும்.
* மோர், தேன் எலுமிச்சை கலந்தும் உடலில் பூசி குளிக்கலாம். சருமம் பளிச்சென்று இருக்கும்.
* மோர் தடவி குளிப்பது வெயிலில் வாடிய, கறுத்த சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply