கேலக்ஸி நோட் 2வுக்கு மற்றுமொரு போட்டியாளர்

Loading...

கேலக்ஸி நோட் 2வுக்கு மற்றுமொரு போட்டியாளர்ஹுவாய் நிறுவனத்தின் இணைஇயக்குனர் திரு.யு செங்க்டோங் கூறுகையில், “ஆம்! நாங்கள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 2வுக்கு மற்றுமொரு போட்டியாளர். 6.1 அங்குலத் திரைகொண்ட 1080பி அளவிலான புதிய ஸ்மார்ட் போனை வெளியிடப்போகிறோம்.” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த புதிய ஸ்மார்ட் போனானது ஹுவாய் அசென்ட் மேட் என அழைக்கப்படும். இதன் சிறப்பம்சமே 6.1 அங்குல அளவிலான 1080பி கொண்ட முழு HD திரைதான்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்த போன் கேலக்ஸி நோட் 2வை விட அதிக சிறப்பம்சம்கள் கொண்டதாகவும், சிறந்த வடிவமைப்புடன் இருக்கும்.

இந்த வரப்போகும் வடிவமைப்பிற்கான நுட்பக்கூறுகள் மட்டும் வெளிவந்துள்ளது. அவையாவன,

6.1 அங்குல அளவிலான 1080பி கொண்ட முழு HD திரை,
1.8 GHz குவாட் கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன்.

ஏற்கெனவே ஹுவாய் நிறுவனம் அசென்ட் D2 என்ற 5 அங்குல திரையுடைய ஸ்மார்ட் போனை வெளியிட்டிருந்ததை அனைவரும் அறிந்ததே. அதைப்பற்றி நமது தளம் ஏற்கெனவே தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹுவாய் அசென்ட் மேட்டானது, அசென்ட் D2வுக்குத் தமையனாக அமையலாம்.

தற்பொழுது இந்த ஸ்மார்ட் போனைப்பற்றி எந்தத்தகவலும் வெளிவராத நிலையில், இது 2013னின் ஆரம்பத்தில் சீனாவில் வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது சில வதந்திகளின்படி, எதிர்வரும் 2013ல் நடைபெறும் ECS (consumer Electronics Show)வில் வெளியிடப்படுமாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply