கேரளா ஸ்டைல் இறால் மசாலா | Tamil Serial Today Org

கேரளா ஸ்டைல் இறால் மசாலா

Loading...

கேரளா ஸ்டைல் இறால் மசாலா
தேவையான பொருட்கள்:
இறால் – 1/2 கிலோ (நன்கு கழுவி சுத்தம் செய்தது) வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை – சிறிது காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/2 கப் தேங்காய் எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, மிளகாய் தூள் நன்கு அடர் நிறத்தில் வரும் போது, தண்ணீர் ஊற்றி, இறாலை சேர்த்து, தட்டு கொண்டு மூடி 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும். பின்பு தட்டை திறந்து, தீயை அதிகரித்து, கலவையில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதனை வேண்டிய அளவில் சுண்ட வைத்து இறக்கினால், சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN