கூகுள் புகைப்பட தேடலிலும் வருகிறது விளம்பரம் சேவை

Loading...

கூகுள் புகைப்பட தேடலிலும் வருகிறது விளம்பரம் சேவைஇணையத்தளங்களின் முதல்வனாக திகழும் கூகுள் ஆனது தனது விளம்பர சேவை மூலம் அதிக இலாபத்தினை வருடம் தோறும் ஈட்டி வருகின்றது.

இந் நிலையில் தற்போது கூகுளின் புகைப்பட தேடலிலும் விளம்பர சேவையை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுள் தேடல் தளமே இன்று அதிக அளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் தேடு பொறியாக காணப்படுகின்றது.

இதனை இலக்காக வைத்தே மேற்கண்ட சேவையினை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் எண்ணியுள்ளது.

இந்த விளம்பரங்கள் டெக்ஸ்டாப் கணணி மற்றும் மொபைல் சாதனங்களின் மேல் பகுதியில் மட்டும் காண்பிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது கூகுள் நிறுவனம் விளம்பர சேவையின் ஊடாக தான் இலாபமடைவது மட்டுமன்றி தனது பயனர்களும் இலாபமடையக் கூடிய வசதியினை அளித்து வருகின்றது.

இதேபோன்று கூகுளின் புகைப்பட தளமான Google Photos தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றுபவர்களும் இலாபம் அடையக் கூடிய வகையில் இச் சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply