கூகுளின் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடப்போகும் எல்ஜி

Loading...

கூகுளின் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடப்போகும் எல்ஜிஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நெக்ஸஸ் 4, எதிர்வரும் 2013ன் ஜனவரி முதல் விற்பனை செய்யப்படலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்மார்ட்போனை இணையத்தில் வெளிவிடுவதுடன் இந்நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான ஆப்டிமஸ் ஜியும் வெளியிடப்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் வெளியிடுகின்றன.

இந்த நெக்ஸஸ் 4 தான் கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன். இதனை கூகுளும் எல்ஜியும் இணைந்துதான் தயாரிக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

ஆனால் எல்ஜி நிறுவனத்தைத் தொடர்புகொண்டால் இது தொடர்பான எந்த தகவல்களையும் தர மறுத்துவிட்டார்கள். இப்பொழுது எதுவும் சொல்வதற்கு இல்லை எனவும் தெரிவிக்கிறார்கள்.

நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை இப்பொழுதே வாங்கவிரும்பினால் ஈபே.இன் என்ற இணையதளத்தில் இது பின்வரும் விலைகளில் கிடைக்கிறது. 8ஜிபி ரூ.25,990க்கும் 16ஜிபி போன் ரூ.29,990க்கும் கிடைக்கும்.

இது பல சிறந்த தொழில்நுட்ப அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டது. ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம், 4.2 அங்குல திரை, அட்டகாசமான கேமரா மற்றும் கூகுளுக்கு உரித்தேயான தரம் மற்றும் கூகுள் அப்ளிகேசன்கள்.

அனால் இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் எல்ஜி தான் வெளியிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply