குள்ளமானவர்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும்

Loading...

குள்ளமானவர்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும்கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.
கையளவு பாடர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.
இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்… இதெல்லாம் ஓகே.
ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.
சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.
குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.
ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply