குறைந்த விலை கொண்ட ஆகாஷ் 2 டேப்லட் வருகிற 11ம் திகதி விற்பனையில்

Loading...

குறைந்த விலை கொண்ட ஆகாஷ் 2 டேப்லட் வருகிற 11ம் திகதி விற்பனையில்குறைந்த விலை கொண்ட டேப்லட் என்று அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்த ஆகாஷ்-2 டேப்லட் வருகிற 11ம் தேதி விற்பனைக்கு வருகிறது. அதோடு இந்த டேப்லட் ஐக்கிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கூகுள் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளம் கொண்டு இயங்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும் பிராசஸர் வசதியினையும் பெறலாம்.

கவர்ச்சிகரமான விலையுடன் ஆகாஷ்-2 டேப்லட் அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால் தொழில் நுட்ப வகையில் சில மேம்பாடுகளை செய்ய வேண்டியதாகவும் இருந்தது. இந்த டேப்லட் முக்கிமாக மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட ஒன்று.

வருகிற 11ம் தேதி இந்த டேப்லட் விற்பனைக்கு வருவதோடு, ஐக்கிய நாடுகளிளும் இந்த ஆகாஷ்-2 டேப்லட் காட்சிக்கு வைக்கப்படும் என்று ஐ.நா நிரந்தர பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply