குறைந்த விலையில் புதிய டிசையர் எஸ்வி ஸ்மார்ட்போன்

Loading...

குறைந்த விலையில் புதிய டிசையர் எஸ்வி ஸ்மார்ட்போன்குறைந்த காலத்திலேயே மக்களின் ஆதரவை சிறப்பாக பெற்ற மொபைல் நிறுவனங்களின் பெயர் பட்டியலில் எச்டிசியும் இடம் பெறும். அந்த அடிப்படையில் எச்டிசி டிசையர் எஸ்வி ஸ்மார்ட்போனின் விலை விவரம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தான் எச்டிசி டிசையர் எஸ்வி ஸ்மார்ட்போன் ரூ. 27,799 விலை கொண்டது என்ற ஒரு செய்தியினை பார்த்தோம். அதற்குள் இந்த ஸ்மார்ட்போன் வலைத்தளங்களில், முன்பு கூறப்பட்ட விலையினைவிட குறைந்த விலை கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பிறகு இதே ஸ்மார்ட்போன் ரூ. 25,999 விலை கொண்டது
என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலையை தெரிந்து கொள்வதற்கும் முன்பு இதன் தொழில் நுட்ப விவரங்களை பார்க்கலாம்.37 சதவிகிதம் அதிக டாக் டைமுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் நெட்வொர்க் வசதி மட்டும் அல்லாமல் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரினையும் கொடுக்கும். இதன் 4.3 இஞ்ச் டபிள்யூவிஜிஏ எஸ்எல்சிடி திரை தொழில் நுட்பத்தினை
வழங்கும்.இந்திய மொபைல் சந்தையில் எச்டிசியின் 4 புதிய ஸ்மார்ட்போன்கள்…

இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 4 ஜிபி இன்பில்ட் மெமரி வசதியினை சிறப்பாக பெறலாம். நவீன தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 1,620 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறப்பான ஆற்றலையும் பெறலாம்.

ஆன்லைனில் எலக்ட்ரானிக் சாதனங்களை பெற உதவும் சஹோலிக் வலைத்தளத்தில் இந்த எச்டிசி டிசையர் எஸ்வி ஸ்மார்ட்போனை ரூ. 21,799 விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply