குறைந்த விலையில் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் ஐபால் நிறுவனம் வழங்கும் புதிய மொபைல்

Loading...

குறைந்த விலையில் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் ஐபால் நிறுவனம் வழங்கும் புதிய மொபைல்ஐபால் நிறுவனம் ஒரு புதிய மொபைலை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த போனிற்கு பேப் 22இ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் பட்ஜெட் விலையில் வருகிறது. அதாவது இந்த போன் ரூ.1,499க்கு விற்கப்பட இருக்கிறது. குறைந்த விலையில் வந்தாலும் இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த மொபைல் டூவல் சிம் வசதியை வழங்குகிறது. மேலும் இந்த மொபைலிலன் 312 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர் இருப்பதால் இது மிக விரைவாக இயங்கும் என்று நம்பலாம். மேலும் இந்த போன் 9 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்கும்.

இந்த போனில் வயர்லஸ் எப்எம் ரேடியோ வசதி உள்ளது. மேலும் இதில் மைக்ரோ எஸ்டி வசதியும் உள்ளதால் இதில் 8ஜிபி வரை சேமித்து வைக்க முடியும். இந்த போன் ஐபாலின் ஷான் வரிசையில் வருகிறது.

அதோடு இந்த போன் 1.3 எம்பி கேமரா, ஜிபிஆர்எஸ் மற்றும் 2.4 இன்ச் டிஸ்ப்ளே ஆகிய எல்லா வசதிகளும் உள்ளன. இதில் 500 பேரின் மொபைல் எண்களை பதிவு செய்யும் வகையில் இதன் போன்புக் மெமரியும் உள்ளது. மேலும் இந்த போனில் ஒரு எல்இடி டார்ச் மற்றும் மொபைல் ட்ராக்கர் உள்ளன. இந்த போன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சப்போர்ட் செய்கின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply