கீமா டிக்கி

Loading...

கீமா டிக்கி
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா – 750 கிராம் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சாட் மசாலா – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) நெய் – 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் மற்றும் நெய் தரவி அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள கீமா கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கீமா டிக்கி ரெடி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply