காஷ்மீரி மட்டன் ரெசிபி

Loading...

காஷ்மீரி மட்டன் ரெசிபி
தேவையான பொருட்கள்:
மட்டன் – 750 கிராம் வெங்காயம் – 3 (நறுக்கியது) சீரகம் – 2 டீஸ்பூன் கிராம்பு – 4 பட்டை – 1 இன்ச் கருப்பு ஏலக்காய் – 2 உலர்ந்த வெந்தய இலை – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மசாலா – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் – 2 பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது) மாங்காய் தூள் – 3 டேபிள் ஸ்பூன் சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, சீரகம், பட்டை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும். அடுத்து உலர்ந்த வெந்தய இலை, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மசாலா சேர்த்து, வர மிளகாயை துண்டுகளாக்கி போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, 8-10 நிமிடம் மசாலா மட்டனில் சேரும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் 2-3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் மாங்காய் தூள், பச்சை மிளகாய், சோம்பு பொடி சேர்த்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காஷ்மீரி ரெசிபியன கட்டா மீட் ரெடி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply