காராச்சேவு

Loading...

காராச்சேவு
தேவையான பொருட்கள்

கடலைமாவு – 1/2 கிலோ
பச்சரிசிமாவு – 2 டீஸ்பூன்
வெண்ணை – 50 கிராம்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு – 4 பல்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க


செய்முறை

முதலில் பூண்டு மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெண்ணை,உப்பு, மிளகாய்ப்பொடி ,கடலைமாவு, அரிசிமாவு, அரைத்து வைத்திருக்கும் பூண்டு பெருங்காய விழுது, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிது மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும்.
மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். காராச் சேவு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply