காரசாரமான நண்டு வறுவல்

Loading...

காரசாரமான நண்டு வறுவல்

தேவையான பொருட்கள் :
நண்டு – ஒரு கிலோ பெரிய வெங்காயம் – இரண்டு தக்காளி – இரண்டு இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன் தேங்காய் – அரை மூடி மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் மிளகாய் தூள் – நான்கு ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து மிளகாய் வாசம் போகும் வரை வதக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். இறுதியில் நண்டை அதில் போட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். இதோ சூடான சுவையான நண்டு வறுவல் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply