கருத்தரிப்பு தொடர்பில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள்

Loading...

கருத்தரிப்பு தொடர்பில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள்கருத்தரிக்க விரும்புவோர் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கருத்தரிப்பை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் பலர், கருத்தரிக்க எவற்றை எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என அறிவதில்லை.

இன்றைய சூழலில் அரசே கூறினாலும் கூட நான்கைந்து குழந்தைங்கள் பெற்றுக் கொள்ள பெற்றோர் விரும்புவதில்லை. இதற்கான காரணங்கள் பொருளாதாரம், விலைவாசி, வேலை பளு, மன அழுத்தம் என நிறைய இருக்கின்றன. இப்போதெல்லாம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு கூட பெண்களிடம் உடலிலும், ஆண்களிடம் மனத்திலும் தெம்பு இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வளவு அவசரகதியில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இனி, கருத்தரிப்பு மற்றும் கருவுறுதல் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் பற்றி காண்போம்…போலிக் அமிலம்

கருத்தரிக்க விரும்பும் பெண்கள் 400msg ஃபோலிக் அமிலத்தை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனளிக்கும். மேலும் கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் இதை பின் தொடர்தலும் நல்லது. இது ஆண்களின் விந்தணு திறனை அதிகரிக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கருத்தடை

மாத்திரை மற்றும் நாட்கள் கருத்தரிக்க விரும்புவோர் நாட்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியத் அவசியம். மாதவிடாய் முடிந்த ஐந்து நாட்கள் கழித்து 6 – 15வது நாட்களுக்குள் கரு நல்ல வளத்துடன் இருக்கும். இந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க உதவும்.

கருத்தடை மாத்திரை மற்றும் நாட்கள் மேலும், கருத்தரிக்க விரும்புவோர் கருத்தடை மாத்திரைகளை இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே நிறுத்திக் கொள்ள வேண்டும்.அம்மாவின் பேச்சு

அம்மாவை விட பெரிய ஆலோசகர் இருக்க முடியாது. எனவே, கருத்தரிக்க விரும்பும் பெண்கள் நாட்கள், மாதவிடாய் குறித்த சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளவது நல்லது.படிப்பினை

கருத்தரிக்க எண்ணுவோர் முதலில் வயது மற்றும் கருத்தரிப்பு பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பெண்கள் கருத்தரிப்பது கடினம். நாற்பதை எட்டும் போது இது முற்றிலுமாக கடினம் ஆகிவிடுகிறது. இதே போல தான் ஆண்களுக்கும், வயதாக வயதாக விந்தணு திறன் குறைந்துவிடும்.டயட்

கருத்தரிக்க விரும்புவோர் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களது உடல்திறன் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி, பழங்கள், ஒமேகா 3 உணவுகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது கர்ப்பிணி காலாத்தில் பெண்களின் உடல்நலனுக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.வைட்டமின் டி

அதே போல வைட்டமின் டி, சி சத்துள்ள உணவுகளையும் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கரு வளர உதவுகிறது. இந்த சத்துக்கள் கரு மற்றும் விந்து இரண்டிற்கும் வலு அளிக்க வல்லது.உடல் பரிசோதனை

ஒருவேளை கருத்தரித்தலில் கடினமாக இருப்பின். உடனே மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் உடல்நல கோளாறு இருந்தால் கூட கருத்தரிக்க கடினமாக இருக்கலாம்.அதிக உடற்பயிற்சி வேண்டாம்

கருத்தரிக்க விரும்பும் போது ஆண்கள் அளவிற்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.உடல் எடை

உடல் எடை அதிகரிக்கும் போது விந்தணு திறன் குறைய ஆரம்பிக்கிறது இதனால் கருத்தரிப்பு அடையும் சதவீதம் குறைய ஆரம்பிக்கிறது. பெண்களுக்கு இது மாதவிடாய் சுழற்சியில் கோளாறுகள் ஏற்படுத்துகிறது.கவனம் தேவை

புகை, மது வேண்டாம் என்பது கட்டாய நிபந்தனை. மேலும், இந்த காலக்கட்டத்தில் அதிகமாக மின்னணு உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம். லேப்டாப் போன்றவை விந்தணு திறனை குறைக்கவல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply