கபிரஜி மீன் கட்லெட்

Loading...

கபிரஜி மீன் கட்லெட்
தேவையான பொருட்கள்:
கொடுவா மீன் – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 நறுக்கியது + 2 அரைத்தது வினிகர் – 2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) சோள மாவு – 1/2 கப் பிரட் தூள் – 1 கப் முட்டை – 4 (நன்கு அடித்தது) எண்ணெய் – 1 கப் உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் 1 மணிநேரத் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர், உப்பு மற்றும் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, பின் அதில் மீன் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து பிரட் தூளில் பிரட்டி அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து எண்ணெயில் போட்டு 10 நிமிடம் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கபிரஜி மீன் கட்லெட் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply