கபாலி டீசர் ஒரு பார்வை TST ORG

Loading...

குனிஞ்சு வணக்கம் சொல்றவன்னு நினைச்சியா..இது வேற லெவல் கபாலி- மிரட்டும் டீசர் ஒரு பார்வைகுனிஞ்சு வணக்கம் சொல்றவன்னு நினைச்சியா இது வேற லெவல் கபாலி- மிரட்டும் டீசர் ஒரு பார்வை

 

உலக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நாள் வந்து விட்டது. சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தின் டீசர் வெளிவர, சமூக வலைத்தளமே ஸ்தம்ப்பித்து விட்டது.

டீசர் ஆரம்பத்திலேயே சந்தோஷ் நாரயணின் பின்னணி இசையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் வாக் வர, அதை தொடர்ந்து ‘ஏன் சார் நீங்க கேங்ஸ்டர் ஆனீங்க’ என்ற கேள்விக்கு ரஜினியின் சிம்பிள் ஸ்மைல். வழக்கம் போல் லைக்ஸ் அள்ளுகிறது.

ரஞ்சித் கூறியது போல் ரஜினி இப்படத்தில் தனக்குள் இருந்த நடிகனை வெளிகொண்டு வந்துள்ளார். அதற்கு டீசரின் வரும் இந்த ஒரு வசனமே உதாரணம், ‘கபாலின்னா நம்பியார் கூப்பிட்டதும், குனிஞ்சு வணக்கம் சொல்றவன்னு நினைச்சியா, கபாலிடா’ என்று அடியாட்களை எட்டி உதைக்கு காட்சி மாஸ்+கிளாஸ்.

அதைவிட டீசர் முடியும் போது ரஜினி யங் லுக்கில் ‘நெருப்புடா’ என்ற BGM-ல் நடந்து வருவது, ஒன்றே ஒன்று தான் சொல்லத்தோன்றுகின்றது. தலைவா எப்ப திரைக்கு வறீங்க.

Loading...
Rates : 0
VTST BN