கபாப் முர்க் ரெசிபி

Loading...

கபாப் முர்க் ரெசிபி

தேவையான பொருட்கள்:
சிக்கன் நெஞ்சுக்கறி – 2 (சிறுதுண்டுகளாக்கப்பட்டது) எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ – 1 சிட்டிகை வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பச்சை குடைமிளகாய் – 1 வெங்காயம் – 1

செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சிக்கன், எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி, 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெண்ணெயை உருக்கி ஒரு பௌலில் ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து க்ரில் கம்பியில் சிக்கன், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, பின் அதன் மேல் குங்குமப்பூ வெண்ணெயை தடவி, க்ரில் மிஷினில் வைத்து வேக வைத்து எடுத்து, அதன் மேல் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பரிமாறினால், சூப்பரான கபாப் முர்க் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply