ஓட்ஸ் இட்லி

Loading...

ஓட்ஸ் இட்லி

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 1 1/2 கப்
ரவை – 3/4 கப்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தயிர் – 3/4 கப்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
தண்ணீர் – 3/4 டம்ளர்
கடுகு – 1/2 டீஸ்பூன்.செய்முறை :

ஒரு கடாயில் ஓட்ஸை 2, 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.

ரவையை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்து ரவையுடன் கலக்கவும்.

ஒரு நொன்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து ரவை – ஓட்ஸ் கலவையுடன் சேர்க்கவும்.

அத்துடன் பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி, தயிர் சேர்த்து பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்து இட்லி மா பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வேக வைத்து எடுத்த பின்னர் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply