ஒரு Messageக்கு $100 ஃபேஸ்புக்கின் புதிய வெடி

Loading...

ஒரு Messageக்கு $100 ஃபேஸ்புக்கின் புதிய வெடிஃபேஸ்புக் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு சோதனை செய்தது. அது என்னவெனில் ஃபேஸ்புக்கில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு பணம் வசூலிப்பதைப்பற்றியதே!

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் நீங்கள், உங்களுடைய நண்பர்கள் பட்டியலில் இல்லாத வேறொருவருக்கு மெசேஜ் அனுப்பினால் உங்களிடமிருந்து 1 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.55!

மேஷபில் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஃபேஸ்புக் நிறுவனம், அதன் நிறுவுனர் மார்க் ஜுகர்பர்க்கை ‘பாலோ’ செய்யாதவர்கள் அவருக்கு மெசேஜ் அனுப்பினால் 100 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும்.’”

ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம், அதன் நிறுவுனர் மார்க் ஜுகர்பர்க்கை ‘பாலோ’ செய்யாதவர்களிடமிருந்து மட்டுமே கட்டணம் வசூலிக்கப்போவதாகத் தெரிகிறது.

இது மார்க் ஜுகர்பர்க்கை ‘பாலோ’ செய்ய வைக்க உபயோகிக்கப்படும் புதிய யுக்தி என்கின்றனர் சிலர். எது எப்படியோ ஃபேஸ்புக் நம்பியே பொழுதை ஒட்டிக்கொண்டிருக்கும் நம்மைப்போன்றவர்களின் தலையில் ‘வெடியை’ போடாமலிருந்தால் சரி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply