ஒரு டெரா பைட் கொள்ளும் பிளாஷ் ட்ரைவ்

Loading...

ஒரு டெரா பைட் கொள்ளும் பிளாஷ் ட்ரைவ்டிஜிட்டல் பைல்களை, குறிப்பாக ஆடியோ, வீடியோ, கேம்ஸ் மற்றும் போட்டோ பைல்களைப் பதிந்து கொள்ள, முக்கிய டேட்டா பைல்களை பாதுகாப்பாக பேக் அப் எடுத்து வைக்க, கைகளில் எடுத்துச் செல்லும் வகையில், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்கள் கிடைக்கின்றன. ஸீ கேட் போன்ற ஹார்ட் டிஸ்க் தயாரிக்கும் நிறுவனங்களே இவற்றைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

இவை எல்லாமே டெராபைட் என்ற அளவில் கொள்ளளவினைக் கொண்டுள்ளன. ஒரு டெரா பைட் என்பது இவற்றின் தொடக்க நிலை அளவாக உள்ளது.

ஒரு டெரா பைட் அளவு கொண்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் விலை ரூ.5,000 என்ற அளவில் உள்ளது.அடுத்த நிலையில் நாம் பலவகையான ஜிபி அளவில் கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவ்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் மிக எளிதாக இவை உள்ளன. பலசரக்கு கடைகளில் கூட இவை தாராளமாக விலைக்கு பல மாடல்களில் கிடைக்கின்றன.

இந்த நிலையில், பிளாஷ் ட்ரைவ்களைத் தயாரிக்கும் கிங்ஸ்டன் நிறுவனம், அண்மையில் ஒரு டெரா பைட் கொள்ளளவில், தன் பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. வர்த்தக ரீதியாக இந்த பிளாஷ் ட்ரைவ் கிடைக்கும் போது, இதன் விலை 2,000 டாலர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பெயர் Kingston DataTraveler HyperX Predator 3.0, இதன் எழுதும் வேகம் நொடிக்கு 160 எம்.பி. ஆகவும், படிக்கும் வேகம் நொடிக்கு 240 எம்பி ஆகவும் உள்ளது.

யு.எஸ்.பி. 2 வகை, நொடிக்கு 30 எம்பி மட்டுமே அதிக பட்சமாகப் படிக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யு.எஸ்.பி. 3 வகை பிளாஷ் ட்ரைவ்கள் நொடிக்கு 10 ஜிபி டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டவைய் ஆகும்.

ஏற்கனவே 512 ஜிபி கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினையும், கிங்ஸ்டன் 1,337 டாலர் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிளாஷ் ட்ரைவ்கள் ஸிங்க் உலோகத்திலான மேல் கவசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 72 மிமீ நீளமும், குறுக்காக 27 மிமீ அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்போது கிடைக்கும் அதிவேக செயல்பாடு கொண்ட கிராபிக் ப்ராசசர்கள், பெரிய அளவிலான பைல்களை உருவாக்க வழி தருவதால், இனி பெரிய அளவு மற்றும் வேகமான பைல் பரிமாற்றம் கொண்ட ட்ரைவ்கள் தேவைப்படும்.

இதனை அறிமுகப்படுத்துகையில், கிங்ஸ்டன் நிறுவனம் இரண்டு வகை பிளாஷ் ட்ரைவ் (DataTraveler Ultimate USB 3) சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 32 மற்றும் 64 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இதனை யு.எஸ்.பி. 2 வேக போர்ட்களிலும், சாதனங்களுடனும் பயன்படுத்தலாம். அனைத்து பிளாஷ் ட்ரைவ்களுக்கும் ஐந்து ஆண்டு உத்தரவாதம் தரப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply