ஒன்லைனில் கணித வரைபடம் அற்புதமான சிந்தனைகளின் அட்டவணை

Loading...

ஒன்லைனில் கணித வரைபடம்  அற்புதமான சிந்தனைகளின் அட்டவணைஉலகிலுள்ள கணிதவியளாளர்கள் இணைந்து இதுவரையில் இல்லாத ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அது என்னவென்று அறிய ஆவலாய் உள்ளதா? ஆம், அது தான் ஒரு பெரிய வரைபடம், விஞ்ஞானம் மற்றும் கணிதத்திலுள்ள பல சிறந்த யோசனைகளை வைத்து உருவாக்கி வருகிறார்கள்.

செயற்பாட்டிலுள்ள இச் செயற்றிட்டம் தற்போது ஒன்லைனில் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. ஆகையால் ஆவலுள்ளவர்கள் இதை ஆராய முடியும்.

‘L-functions and Modular Forms Database’, (LMFDB) எனும் தரவுத் தளத்திற்கு செல்வதன் மூலம் நீங்கள் இதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இத் தளமானது 12 நாடுகளைச் சேர்ந்த 80 கணிதவியளாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தின் செயற்பாடுகள் இன்னும் பூர்த்தியாக்கப்படா விட்டாலும், தற்போதுவரையில் கிட்டத்தட் 20 மில்லியன் கணித விடயங்கள் L-functions இல் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தளமானது இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply