ஐடியா அவ்ரஸ் vs ஸ்பைஸ் எம்ஐ 320

Loading...

ஐடியா அவ்ரஸ் vs ஸ்பைஸ் எம்ஐ-320ஐடியா அவ்ரஸ் மற்றும் ஸ்பைஸ் எம்ஐ-320 ஆகிய ஸ்மார்ட்போன் பற்றிய ஒப்பீட்டினை பார்க்கலாம். டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் தொழில் நுட்ப விவரங்களை பற்றி பார்க்கலாம்.

ஐடியா செலுலார் நிறுவனத்தின் அவ்ரஸ் ஸ்மார்ட்போன் 136 கிராம் எடையினை கொண்டதாக இருக்கும். எம்ஐ-320 ஸ்மார்ட்போன் 120 கிராம் எடையினை கொண்டதாக இருக்கும். ஸ்பைஸ் ஸ்மார்ட்போன், ஐடியா ஸ்மார்ட்போனை விடவும் சற்று குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.

3.5 இஞ்ச் திரை வசதியினை அவ்ரஸ் ஸ்மார்ட்போனில் பெறலாம். இதன் தொடுதிரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஸ்பைஸ் எம்ஐ-320 ஸ்மார்ட்போன் 3.2 டிஎப்டி எல்சிடி தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போனிலும் 320 X 480 பிக்ஸல் திரை துல்லயித்தினை பெறலாம்.

அவ்ரஸ் 800 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட மீடியாடெக் எஸ்டி-6573 பிராசஸர் வசதியினை வழங்கும். ஸ்பைஸ் எம்ஐ-320 ஸ்மார்ட்போன் 650 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரினை கொண்டாதாக இருக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

அவ்ரஸ் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் அளிக்கும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் மெயின் கேமரா மற்றும் முகப்பு கேமரா என இரட்டை கேமராக்களை வழங்கும். எம்ஐ-320 ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் ரியர் கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.

256 ரேம் கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதியினை பெற முடியும். அவ்ரஸ் ஸ்மார்ட்போன் 1,300 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி மற்றும் எம்ஐ-320 ஸ்மார்ட்போன் 1,200 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் கொடுக்கும். இதனால் நீடித்த ஆற்றலை இந்த ஸ்மார்ட்போன்களில் எளிதாக பெறலாம். ஸ்பைஸ் எம்ஐ-320 ஸ்மார்ட்போனை ரூ. 4,899 விலையிலும், அவ்ரஸ் ஸ்மார்ட்போனில் ரூ. 7,190 விலையிலும் பெற முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply