ஏர்டெல் வோடோபோனுடன் இணைந்து இலவச மெசஞ்சர் சேவையை வழங்கும் ரிம்

Loading...

ஏர்டெல் வோடோபோனுடன் இணைந்து இலவச மெசஞ்சர் சேவையை வழங்கும் ரிம்இந்த தீவாளிக்கு ரிம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பரிசுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. குறிப்பாக தனது ஸ்மார்ட்போன்களின் விலையைக் கணிசமான அளவில் குறைத்திருக்கிறது. அதோடு தனது ப்ளாக்பெரி போனை வாங்குபவர்களுக்கு பம்பர் பரிசுகளையும் வழங்குகிறது.

தற்போது தனது ப்ளாக்பெரி கர்வ் 9220 அல்லது கர்வ் 9320 ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ஓராண்டு காலம் இலவசமாக ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவையை வழங்க இருப்பதாக ரிம் அறிவித்திருக்கிறது.

மேலும் இந்த ஓராண்டு இலவச சேவையை இந்த ப்ளாக்பெரி கர்வ் 9220 அல்லது கர்வ் 9320 ஸ்மார்ட்போன்களை நவம்பர் 9 முதல் டிசம்பர் 9 ஆகிய தேதிகளுக்குள் வாங்குபவர்களுக்கு மட்டுமே வழங்க இருக்கிறது. அதோடு இந்த ஸ்மார்போன்களை வாங்கி ஏர்டெல் மற்றும் வோடோபோன் சிம்களை வாங்கும் புதிய வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த இலவச சேவையை அனுபவிக்கலாம்.

ப்ளாக்பெரி கர்வ் 9220 அல்லது கர்வ் 9320 ஸ்மார்ட்போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நன்றாக விற்பனையாகி வருகிறது. குறிப்பாக இந்திய இளை சமுதாயம் இந்த ஸ்மார்ட்போன்களை பெருவாரியாக வாங்குகின்றனர். தற்போது இந்த இலவச ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவையையும் ரிம் வழங்குவதால் இது இளைஞர்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்பலாம்.

இந்த ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவையை இலவசமாகப் பெற விரும்பும் ப்ளாக்பெரி கர்வ் 9220 அல்லது கர்வ் 9320 ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிபிஎம் என்று டைப் செய்து 543210 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் இந்த இலவச ப்ளாக்பெரி மெசஞ்சர் சேவை அவர்களுக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.

ஆனால் வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ப்ளாக்பெரி கர்வ் 9220 அல்லது கர்வ் 9320 ஸ்மார்ட்போன்கள் மற்றும் வோடோபோன் சிம் கார்டை வாங்கிய 48 மணி நேரத்திற்குள் வோடோபோன் தானாகவே இந்த இலவச சேவையை ஆக்டிவேட் செய்துவிடும்.

ப்ளாக்பெரி கர்வ் 9220 ஸ்மார்ட்போனை வோடோபோன் ரூ.11,299க்கு விற்றுவருகிறது. அதே நேரத்தில் இந்த போனை ஏர்டெல் ரூ.10,990க்கு விற்று வருகிறது. கர்வ் 9320 ஸ்மார்ட்போனை வோடோபோன் ரூ.15,500க்கு விற்று வருகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply