எல்ஜி ஆப்டிமஸ் வியூ என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading...

எல்ஜி ஆப்டிமஸ் வியூ என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்எல்ஜி ஆப்டிமஸ் வியூ என்ற புதிய ஸ்மார்ட்போன் நமது எலக்ட்ரானிக் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை விவரங்களும் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பார்ப்பதற்கும் முன்பு இதன் தொழில் நுட்ப விவரங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம். இந்த ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம்
சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும்.

இந்த எல்ஜி வியூ ஆப்டிமஸ் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் மற்றும் விலை விவரங்களின் தகவல்கள் அதிகார பூர்வமாக எல்ஜி நிறுவனத்தில் வலைத்தளத்திலும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி தொடர்ந்து வரும் விவரஙகளை பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் சுமார் 5 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை வழங்குவதோடு அற்புதமான திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸரை பெறலாம் என்பதோடு, இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியினையும் பெறலாம். இதில் 2,080 எம்ஏஎச் பேட்டரியினை சிறப்பாக பயன்படுத்தி, அதிக ஆற்றலையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் பேசுவதற்கு என்று மட்டும் அல்லாமல், உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் சிறந்த வசதிகளையும் பயன்படுத்தலாம் தான். அந்த வகையில் என்எப்சி, 3ஜி, வைபை மற்றும் தொழில் நுட்பம் ஆகிய வசதிகளை சிறப்பாக இந்த ஆப்டிமஸ் வியூ ஸ்மார்ட்போனில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.

புதுமையாக இந்த ஸ்மார்ட்போனில் என்ன இருக்கிறது என்றும் தோன்றும். இந்த புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்ப்ரூஃப் ஒன் கீ ரிமோட் வசதியினையும் பெறலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ. 34,500 விலை கொண்டதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply