எண்ணெய் சருமத்திற்கான இதோ எளிய தீர்வுகள்

Loading...

எண்ணெய் சருமத்திற்கான இதோ எளிய தீர்வுகள்எண்ணெய் சருமம் கொண்டவர்கள் பல பிரச்சனைகளுக்கும் ஆளாவார்கள். முகப்பரு,மாசு.பொலிவின்மை எண்ணெய் வடிதல் என பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சில எளிய முறைகளைப் பின்பற்றலாம். முகத்தினை காத்திடலாம். தினமும் அதிகமாய் நீர் குடிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ வேண்டும். வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்கலாம். உங்களுக்கான சில வழிகள்

பார்லி பேக்:

எலுமிச்சைத் தோல் பொடி -1 ஸ்பூன்
பார்லி பொடி -1 ஸ்பூன்
பால் -அரை ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர்- சிறிதளவு.
மேலே சொன்னவற்றையெல்லாம் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் போடவும்.பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவவும். தேவையான எண்ணெய் பசையை மட்டும் இருக்கச் செய்து, அதிகமானவற்றை வெளியேற்றுகிறது இந்த கலவை.

ஆப்பிள் கலவை:

ஒரு ஸ்பூன் அளவில் ஆப்பிள் சாறெடுத்து அதில் 5 அல்லது 6 ஸ்பூன் அளவில் எலுமிச்சை சாற்றினை கலந்து முகத்தில் தடவ வேண்டும். காய்ந்தபின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இது தொடர்ந்து உபயோகித்தால் நாளடைவில் எண்ணெய் வடிவதை குறைக்கும்.

புதினா பேக்:

புதினா எண்ணெய் சருமத்திற்கு மிக நல்ல தீர்வாகும்
புதினா சாறு -4 ஸ்பூன்
பப்பாளி துண்டுகள் -கால் கப்
கடலை மாவு- 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-அரை ஸ்பூன்
மேலே கூறியவற்றை கலந்து முகம் ,கழுத்துப் பகுதில பேக்காக போட்டு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பாதாப் பேக்

5 பாதாப் பருப்புகளை முந்தைய இரவில் ஊற வைத்து,மறு நாள் காலையில் பாதாமை நைஸாக அரைத்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் போட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்

உணவு வகைகளில் தவிர்க்க வேண்டியவை:

கொழுப்புமிக்க உணவுகள்,எண்ணெய்,நெய் பாலாடை கட்டிகள் கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது. பழங்கள் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். போதிய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply