எடிஐவி ஸ்மார்ட் பிசி ப்ரோ என்ற ஒரு புதிய லப்டப்பை களமிறக்கிய சாம்சாங்

Loading...

எடிஐவி ஸ்மார்ட் பிசி ப்ரோ என்ற ஒரு புதிய லப்டப்பை களமிறக்கிய சாம்சாங்இந்திய கணினிச் சந்தையில் முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் தனது எண்ணற்ற புதிய லேப்டாப்புகளை இந்திய கணினி சந்தையில் களமிறக்கி வருகிறது சாம்சங். அந்த வகையில் தற்போது எடிஐவி ஸ்மார்ட் பிசி ப்ரோ என்ற ஒரு புதிய லேப்டாப்பை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த உயர்தர லேப்டாப் ரூ.75,490க்கு விற்கப்படுகிறது.

இந்த புதிய சாம்சங் லேப்டாப்பில் ஏராளமான உயர்தர தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. இந்த புதிய லேப்டாப்பில் இன்டல் ஐவி பிரிட்ஜ் டூவல் கோர் ஐவ5 ப்ராசஸர் உள்ளது. அதனால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும். அதோடு இந்த லேப்டாபு ஒரு முழுமையான எச்டி வசதி கொண்ட 11.6 இன்ச் டிஸ்ப்ளேயையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த லேப்டாப்பில் உள்ள கீபோர்டைத் தனியாக பிரித்து எடுக்க முடியும். இந்த லேப்டாப்பில் 4ஜிபி ரேம், 128ஜிபி எஸ்எஸ்டி ட்ரைவ் மற்றும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. அதனால் இந்த லேப்டாப்பில் அருமையான பாடல்களைக் கேட்க முடியும்.

இந்த லேப்டாப்பில் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதாவது பின்புறம் 5.0எம்பி கேமராவும், முகப்பில் 2.0எம்பி கேமராவும் இந்த லேப்டாப்பில் உள்ளன. இதன் பேட்டரி இந்த லேப்டாப்புக்கு 8.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இவற்றைத் தவிர்த்து இந்த லேப்டாப்பில் எஸ்-பென் ஸ்டைலஸ், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ஹெட்போன் ஜாக் மற்றும் சாம்சங்கின் பிராப்ரியேட்டரி டோக் போர்ட் போன்ற வசதிகளையும் பார்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply