எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான தொழில் நுட்பம்

Loading...

எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான தொழில் நுட்பம்சமீபத்தில் உருவாக்கப்பட்ட இந்த எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான தொழில் நுட்பத்தினை, சிறப்பாக பார்க்கலாம். எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்று வருகிறது. இதனால் எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போனான யூ-வின் சிறப்பு கண்ணோட்டத்தை இங்கே தெளிவாக பார்க்கலாம்.


திரை வசதி:

3.5 இஞ்ச் திரை வசதியில் இந்த ஸ்மார்ட்போன், காட்சிகளை சிறப்பாக பார்க்க உதவும். எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் திரை அகன்றதாக இருப்பது, தகவல்களை தெளிவாக பார்க்கவும் மற்றும் கம்பீரமான தோற்றத்தினையும் வழங்கும். இதனால் இந்த எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனில் 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.


ஸ்மார்ட்போனின் எடை:

இந்த ஸ்மார்ட்போன், ஐபோன்-5 ஸ்மார்ட்போனையும் விட குறைந்த எடை கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் குறைந்ததாக 110 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இதனால் இந்த ஸ்மார்ட்போனை எளிதாக கையாளலாம்.


இயங்குதளம்:

ஆன்ட்ராய்டு 2.3.7 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் கூடிய விரைவில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி அப்கிரேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மெமரி ஸ்டோரேஜ் வசதி:

8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி, 50 ஜிபி வரை ஃப்ரீ க்ளவுடு ஸ்டோரேஜ் வசதி 2 ஜிபி வரை ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் ஸ்டோரேஜ் ஆகிய வசதியினை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள முடியும்.


உயர்ந்த தொழில் நுட்ப வசதி:

வைபை, ப்ளூடூத் 4.0 போன்ற தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்ப வசதி கொடுக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் டாக், வீடியோ சாட், கூகுள் மெயில், கூகுள் கேலன்டர், கூகுள் கேலரி 3டி, கூகுள் மேப் ஆகிய வசதிகளும் ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளது.


கேமரா வசதி:

இதில் இருக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவினால், ஆட்டோஃபோக்கஸ, 16எக்ஸ் டிஜிட்டல் சூம், 720 எச்டி வீடியோ ரெக்கார்டிங், 3டி பனோரமா போன்ற தொழில் நுட்பங்களை எளிதாக பெறலாம். எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனில் விஜிஏ முகப்பு கேமராவும் வழங்கப்படும்.


பேட்டரி ஆற்றல்:

இந்த ஸ்மார்ட்போனில் 1,320 எம்ஏஎச் பேட்டரியினால் 6 மணி நேரம் 36 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 472 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், கேமரா மற்றும் மீடியா ப்ளேயர் ஆகிய வசதிகளையும் எளிதாக பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply