ஊளி மீன் ப்ரை

Loading...

ஊளி மீன் ப்ரை
தேவையான பொருட்கள்:
ஊளி மீன் – அரை கிலோ மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் சோம்புத் தூள் – ஒரு டீ ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் அரைத்த விழுது – 2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
மீன் ப்ரை செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து வட்ட வடிவில் வெட்டி வைக்கவும். அகலமான பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சின்ன வெங்காயம் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு ஆகியவைகளை நன்றாக பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும். இந்த கலவையை வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளின் மீது நன்றாக படுமாறு தடவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும். சுவையான மீன் ப்ரை ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply