உலகின் மிக சக்தி வாய்ந்த அணுப் பிளவு நடவடிக்கை மீண்டும் இயக்கம்

Loading...

உலகின் மிக சக்தி வாய்ந்த அணுப் பிளவு நடவடிக்கை மீண்டும் இயக்கம்நீண்டகால உறங்குநிலைக்குப் பின்னர், மீண்டும் உலகின் மிக சக்தி வாய்ந்த அணுப்பிளவு முறை (Large Hadron Collider – LHC) நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ் LHC கிட்டத்தட்ட 27 கிலோ மீட்டர் நீளமானது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள CERN அமைப்பினால் இந்த LHC மீண்டும் புரோத்தன்களின் அடிப்படைக் கூறுகளை ஆராயவென, அப்புரோத்தன்களை மோதியடிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை LHC ஆனது சில சிக்கலுக்குரிய பௌதீக கேள்விகளுக்கு விடை காண்பதற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பிரபஞ்சத்திலுள்ள பொருவாரியான துணிக்கைகள் எதில் முடிவடைகின்றன என்பது பற்றியும், பௌதீகவியளாளர்களால் கிட்டத்தட்ட கால்வாசி பொருட்கள் இதனனாலேயே ஆக்கப்படுகிறது என நம்பப்படும் அனுமான துணிக்கையாகிய கரும் துணிக்கை பற்றியும் பல புதிய விடயங்களை அறிய முடியும் என நம்பப்படுகிறது.

2016 இல் இது 6 மாத காலத்திற்கு பயன்பாட்டிலிருக்கும் எனவும், கிட்டத்தட்ட செக்கனுக்கு 2 பில்லியன் மோதல்கள் நிகழ்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது 2015 இல் நிகழ்த்தப்பட்ட மோதல்களிலும் 6 மடங்கிலும் அதிகமாகும். இம்முறை LHC முதல் பயன்பாட்டிலும் இரு மடங்கு சக்தியுடன் இயக்கப்படும் எனவும் தெருவிக்கப்படுகிறது. இதனால் பௌதீகத்தில் பல எல்லைகளை தாண்டி செல்ல முடியும் என நம்பப்படுகிறது.

அத்துடன் பலவகை புதிய துணிக்கைகளையும் இனங்கானக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply