உணவில் கராம்பை சேர்த்து வந்தால் பெறும் அற்புத நன்மைகள்

Loading...

உணவில் கராம்பை சேர்த்து வந்தால் பெறும் அற்புத நன்மைகள்ஒவ்வொருவரின் வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் கராம்பு. பிரியாணி, குருமா போன்றவற்றில் சேர்க்கும் கிராம்பு உணவிற்கு நல்ல மணத்தைக் கொடுப்பதோடு, பல நன்மைகளையும் வாரி வழங்குகிறது. எனவே இன்றிலிருந்து நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் கிராம்பை சேர்த்து வாருங்கள்.

இப்படி சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். கராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட், வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிரம்பிய கராம்பை சமைக்கும் உணவிலோ அல்லது தினமும் 2 சாப்பிட்டு வாருங்கள்.செரிமான பிரச்சனைகள்

கராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவற்றையும் சரிசெய்யும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால், கராம்பை பொடி செய்தோ அல்லது வறுத்தோ தேனுடன் கலந்து உட்கொள்ள உடனே சரியாகும்.பாலியல் ஆரோக்கியம்

கராம்பு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக கராம்பு பாலுணர்ச்சியைத் தூண்டி, மலட்டுத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். எனவே உங்கள் பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கிராம்பை தினமும் தேனுடன் சேர்த்து சிறிது உட்கொண்டு வாருங்கள்.நீரிழிவைக் குறைக்கும்

கராம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் கராம்பை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு, இன்சுலின் அளவும் சீராக இருக்கும். எனவே உங்களுக்கு நீரிழிவு வராமல் இருக்க வேண்டுமெனில், கிராம்பை உட்கொண்டு வாருங்கள்.எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது

கராம்புகளில் உள்ள யூகனால் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, எலும்புகளுக்கு வேண்டிய கனிமச்சத்துக்களை வழங்கி எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் கிராம்பை அன்றாடம் உட்கொண்டு வருவது நல்லது.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கராம்பு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். குறிப்பாக கராம்பு இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரித்து, நோய்கிருமிகளை எதிர்த்துப் போராடும். எனவே உங்களுக்கு அடிக்கடி ஏதேனும் உடல் சுகவீனமானால், கிராம்பை அன்றாடம் தேனுடன் சேர்த்து உட்கொண்டு வாருங்கள்.உடல் வலி குறையும்

கராம்பு ஓர் சிறந்த வலி நிவாரணி. இதில் உள்ள யூகனால் உடலில் ஏற்படும் வலிகளைக் குறைத்து, உட்காயங்களை குணமாக்கும். ஆகவே உங்களுக்கு உடல் வலி அதிகம் இருப்பின், தினமும் 2 கிராம்பை வாயில் போட்டு மென்று வாருங்கள்.பல் வலி

உங்களுக்கு பல் சொத்தை மற்றும் பல் வலி இருந்தால், அதிலிருந்து கராம்பு உடனடி நிவாரணம் வழங்கும். அதுமட்டுமின்றி, கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று வந்தால், வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படும்.புற்றுநோய் தடுக்கப்படும்

கராம்பு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அழிக்கவும் செய்யும். மேலும் ஆய்வுகளிலும் கராம்பு நுரையீரல் புற்றுநேய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே தினமும் கராம்பை உட்கொண்டு, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.தலை வலி

கராம்பு தலைவலிக்கு மிகச் சிறந்த ஓர் பொருள். உங்களுக்கு அடிக்கடி கடுமையான தலைவலி வந்தால், கராம்பு பொடியை பாலில் சேர்த்து, தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.கல்லீரல் நோய்கள்

கராம்பு கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் ஓர் உணவுப் பொருள். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கல்லீரலை பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க கராம்பை அன்றாடம் உட்கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply