உடல் பருமனா கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க

Loading...

உடல் பருமனா கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் குடிங்கஇந்த இன்ஸ்டென்ட் காலத்துல எல்லாமே ஈஸியாய் கிடைக்குது. சாலையில் நடந்து செல்லும்போது விதவிதமான கலர்கலரான உணவுவகைகள் மற்றும் அதன் வாசனைகள் நம்மை ஈர்க்கும். நாக்கு ஊறச் செய்து சாப்பிடத் தூண்டும். உடனே சென்று ஒரு பிடிபிடித்துவிட்டுதான் வருவோம்.பின் அதற்கு அடிமையாகி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிட்டு உடல் எடையை அதிகப்படுத்தி விடுவோம்.
இதுதான் குழந்தைகளிருந்து பெரியவர்கள் வரை நடக்கிறது. உடல் எடை அதிகமானால் டயாபடிஸ், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.
பிறகு எப்போதுதான் வாழ்க்கையை அனுபவிப்பது என்கிறீர்களா? அளவுக்கு மீறினால் எதுவும் உடலுக்கு கேடு என்பதை சாப்பிடும்போதெல்லாம் நினைவில், வைத்துக் கொள்ளுங்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய எனர்ஜி தருகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது .கூடவே ரத்தக்கொதிப்பு,சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.
வாழ்க்கை அனுபவிக்க என்று சொல்லி, கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு , அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த எளிய ட்ரிங்க் குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும் .

தேவையானவை :

வாழைப்பழம் -1
ஆரஞ்சு -1
பட்டைபொடி-அரைஸ்பூன்
சோயா மில்க்-அரைக் கப்
வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக் கொதிப்பை அண்ட விடாது. ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.
ஆரஞ்சில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
வாழைப்பழம் ஆரஞ்சு, ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து பருகவும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது. மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply