உடலில் மினரல் சத்து குறைபாட்டை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்

Loading...

உடலில் மினரல் சத்து குறைபாட்டை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்நம் உடலில் எல்ல சத்துக்களும் சரிவிகிதம் இருந்தால் ஒழுங்கான உடல் வளர்ச்சியைப் பெற முடியும்.நாம் பெரும்பாலும் கவனம் கொள்வது புரோட்டின் கார்போஹைட்ரேட்,கொழுப்பு மற்றும் விட்டமின்கள், ஆகியவவைகளில்தான்.
ஆனால் உடலில் ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லிற்கு அனுப்பும் தகவல் பரிமாற்றத்திற்கு, கனிமச் சத்துக்களின் பங்கு மிக முக்கியமானது. பொட்டாசியம் சோடியம், கால்சியம், மெக்னீசியம், மேங்கனீஸ் , இரும்புச் சத்து ஆகியவை மிக முக்கியமாகத் தேவைப்படும் கனிமச் சத்துக்கள்.
கனிமச் சத்துக்கள் குறைவாக இருந்தால், நாம் நார்மல் டயட்டிலேயே அதை சரி செய்யலாம். மிகவும் கவனிக்கப்படாமலே இருந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய சூழ் நிலையைக் கூட உருவாக்கும். இப்போது உங்கள் உடலில் கனிமச் சத்துக்கள் குறைந்தால் ஏற்படும் அறிகுறிகளைப் பார்க்கலாம்.


அடிவயிற்றில் வலி:

தொடர்ந்து அடி வயிறு வலித்தால் அது பொட்டாசியம் அல்லது வேறு முக்கிய மினரல் குறைப்பாட்டினால் கூட இருக்கலாம். உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.


வயிறு உப்புசம்:

வயிற்றில் வாய்வுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் இருந்தால் அது மெக்னீசியம் மற்றும் சோடியம் குறைப்பாட்டினால் கூட இருக்கலாம். இவ்விரண்டு சத்துக்களும் குறைந்தால் முதலில் ஜீரண மண்டலத்தைப் பாதிக்கும்.


பசியின்மை:

எப்போதும் வயிற்றில் சொல்ல முடியாத சங்கடங்கள் உருவாகிறதா? பசியே ஏற்படாமல் இருந்தால், அல்லது சிறிது சாப்பிட்டதும் வயிறு நிறைந்தது போல் இருந்தால் கால்சியம் மற்றும் சோடியம் பற்றாக்குறையினால்தான்.


தசைப்பிடிப்பு :

திடீரென தசைப் பிடிப்பு அல்லது நரம்பு கை மற்றும் கால்களில் இழுப்பது போலிருந்தால் அது பொட்டாசியம் கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைப்பாட்டில்தான் என தெரிந்துகொள்ளவேண்டும்.


குமட்டல் வாந்தி :

அடிக்கடி வாந்தி குமட்டல் வருவது போலிருந்தால் அது மினரல் பற்றாக்குறையினால்தான். வேறு எந்த காரணமுமில்லாமல் இது தொடர்ந்தால் தகுந்த கனிமச் சத்துக்கள் கொண்ட உணவினை உண்ண வேண்டும்.


வயிற்றுப் போக்கு அல்லது மலச் சிக்கல்:

அடிக்கடி வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் அல்லது இவ்விரண்டும் மாறி மாறி ஏற்பட்டால் கண்டிப்பாக அது மினரல் குறைப்பாட்டினால்தான். ஆகவே தாமதிக்காமல் மருத்துவரை நாடி,தகுந்த சிகிச்சையினை எடுத்துக் கொள்வது நிலமையை மோசமடையச் செய்யாமல் இருக்கும்.


சீரற்ற இதயத்துடிப்பு:

சில சமயங்களில் படபடவென இதயம் துடிக்கும். மற்ற சமயங்களில் நார்மலக இருக்கும். இப்படி சீராக இதயத்துடிப்பு இல்லையென்றால் அது இந்த கனிமச் சத்து குறைப்பாட்டினால் தரும் எச்சரிக்கைதான்.


நோய் எதிர்ப்பு திறன் குறைவு:

கனிமச் சத்துய்க்கள் குறையும்போது நோய் எதிர்ப்பு செல்களும் குறையும். இதனால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட முடியாது. எப்போதும் தூக்கம் வருவதைப் போலவே இருக்கும். இந்த அறிகுறி இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


ரத்த சோகை :

இரும்புச் சத்து குறையும்போது ரத்த சோகை ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்துவது இரும்பு சத்தாகும். இதன் குறைப்பாட்டினால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்து ரத்த சோகை வரும் ஆபத்து உள்ளது. இதன் தீவிரமான குறைபாடு நிரந்த படுக்கையிலேயே கூட விட்டுவிடும்.


உடல் மற்றும் மன சோர்வு:

உடல் எப்போதும் மந்தமாகவே இருக்கும். தேவையில்லாத கவலைகள் வருவது போலிருக்கும். எதையும் சரிவரச் செய்யாமல் போகும். இவைகள் மினரல்களின் குறைப்பாட்டினால்தான் வருபவை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply