உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிட்டதா இதோ விரட்டியடிக்கும் உணவுகள்

Loading...

உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிட்டதா இதோ விரட்டியடிக்கும் உணவுகள்ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடலில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே உடலில் உள்ள நச்சுத்தன்மையை விரட்டும் உணவுகளை கண்டறிந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் கிடைக்கும்.


பூண்டு

பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது.

அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே. பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும்.


எலுமிச்சை

நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை.

எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும்.

அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும். எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும்.

இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும்.

Loading...
Rates : 0
VTST BN