உடலில் தேங்கும் நச்சு மற்றும் கொழுப்பை வேகமாக அகற்ற பயன்தரும் ஜூஸ்

Loading...

உடலில் தேங்கும் நச்சு மற்றும் கொழுப்பை வேகமாக அகற்ற பயன்தரும் ஜூஸ்கல்லீரலின் நல்ல செயலாற்றல் தான் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அடையாளம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கல்லீரல் நலனில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் எனவும் கூறுகின்றனர்.
நமது உடலில் சிறுநீரகம், நுரையீரலில் தேங்கும் அளவிற்குக் நிகராக கல்லீரலில் அதிக நச்சுக்கள் தேங்குகிறது. இதனால், சிறுநீரக செயலாற்றல், செரிமானம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க இது காரணியாக அமைகிறது.

காரணிகள்

ஊட்டச்சத்து குறைவான உணவு, சுற்றுப்புற மாசு, உடல் வேலை குறைவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது பழக்க, போன்றவை தான் கல்லீரலில் நச்சுக்கள் அதிகரிக்கவும், உடல் எடை கூடவும் முக்கிய காரணிகள்.

அற்புத ஜூஸ்

எனவே, கல்லீரலில் உள்ள நச்சுக்களை அழிக்க, உடலில் தேங்கும் அதிக கொழுப்பை கரைக்க இந்த இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஜூஸை குடித்து வாருங்கள். இந்த ஜூஸ் எளிதாக செரிமானம் ஆகவும், உடற்சக்தியை அதிகரிக்கவும் பயனளிக்கிறது.

தேவையான பொருட்கள்:

ஆறு கேல் (Kale) இலைகள்
பாதி எலுமிச்சை பழம்
இரண்டு ஆப்பிள்
அரை இன்ச் அளவிலான இஞ்சி
ஒரு பீட்ரூட்
மூன்று கேரட்
இவை எல்லாம் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளாக இருந்தால் மிகவும் சிறப்பு.

செய்முறை:

இந்த அனைத்து உணவுப் பொருட்களையும் இரண்டு கப் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். பிறகு இந்த ஜூஸை நன்கு வடிக்கட்ட வேண்டும். இந்த ஜூஸை ஒரு நாளுக்கு 2 – 3 முறை வரையிலும் குடித்து வரலாம்.

கேல் (Kale)

கேல், இந்த தாவர உணவில் குளோரோபில் மிகுதியாக இருக்கிறது. இந்த குளோரோபில் இரத்தில் தேங்கும் நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உடலில் தேங்கும் இரசாயன கலவை மற்றும் பூச்சிக்கொல்லி மூலப்பொருட்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

எலுமிச்சை

வைட்டமின் சி சத்து மிகுதியாக இருக்கும் சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடலில் தேங்கும் நச்சுகளை போக்க சிறந்த உணவாகும். மேலும், இது கல்லீரலின் செயல்பாடு மற்றும் திறனை ஊக்குவிக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் எண்ணற்ற சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அதிலும், ஆப்பிளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், இது செரிமான குழாய் செயலாற்றல் அதிகரிக்க வெகுவாக பயனளிக்கிறது.

இஞ்சி

குமட்டல், அஜீரணம், மலச்சிக்கல், வாய்வு தொல்லை போன்ற பலவற்றுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்க கூடியது இஞ்சி.

பீட்ரூட் மற்றும் கேரட்

இவை இரண்டிலும், பீட்டா- கரோட்டின் (வைட்டமின் எ) மிகுதியாக இருக்கிறது. இது கல்லீரல் செயலாற்றலை வெகுவாக ஊக்குவித்து, ஆரோக்கியம் மேம்பட செய்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply