ஈஸியான முட்டை குழம்பு

Loading...

ஈஸியான முட்டை குழம்பு
தேவையான பொருட்கள் :
முட்டை – 5 வெங்காயம் – 2 தக்காளி – 3 இஞ்சிபூண்டு விழுது – 2 ஸ்பூன் தேங்காய் பால் – 1 கப் தனியா தூள் – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் சீரகத் தூள் – 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன் கரம்மசாலா பொடி – சிறிதளவு பட்டை – 1 கிராம்பு – 2 ஏலக்காய்- 2 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்து வதக்கவும். பின் அவை நன்கு வெடித்தப் பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சிபூண்டு விழுதைப் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும். நன்கு வதக்கியப் பின் அத்துடன் தனியா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்தப் பிறகு உப்பு சுவை பார்த்து, பின் அடுப்பை சிம்மில் வைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடம் தட்டை வைத்து மூடி, வேக விடவும். இப்போது சுவையான, ஈஸியான முட்டை குழம்பு ரெடி!!! இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply