இளமையைத்திருப்பித்தரும் மூலிகைகள்

Loading...

இளமையைத்திருப்பித்தரும் மூலிகைகள்நீங்கள் எத்தனை ஆயிரம் கொடுத்து அழகு சாதனப்பொருட்கள் வாங்கி உபயோகப்படுத்தினாலும் உங்கள் வயது திரும்பாது. ஏனெனில், இரசாயனம் ஒருபோதும் உங்களுக்கு பயனளிக்காது. ஆனால், இந்த மூலிகைகள் உங்களுக்கு அந்த இளமையைத்திருப்பித்தரும்.
உங்கள் முகம் நன்கு பொலிவுடனும், இளமையாகவும் காட்சியளிக்க இயற்கை மூலிகைகள் நல்ல பயன் தரும்.
கற்றாழை, வேப்பிலை, மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ போன்றவை உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க வெகுவாக உதவும். இவற்றைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
கற்றாழையில் இருக்கும் திரவம் உங்கள் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை கொல்கிறது, முக சுருக்கங்கள் மறைய உதவுகிறது மற்றும் சருமத்தில் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்துகிறது.
வேப்பிலை இயற்கை நிவாரணத்தில் மிகவும் நல்ல தீர்வு அளிப்பது வேப்பிலை ஆகும். இது முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளையும் சரி செய்ய வெகுவாக உதவுகிறது.
சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது வேப்பிலை. மஞ்சள் மற்றுமொரு சிறந்த இயற்கை நிவாரணி மஞ்சள் ஆகும்.
இது, மாசு மரு, கருவளையம், கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கிறது. சந்தனம் குளிர்ச்சி உடையது. இது சரும அலற்சிகளுக்கு தீர்வளிக்கும், சருமத்தை மென்மையடைய செய்யும் மற்றும் சருமத்தின் வலிமையை அதிகரிக்கும்.
ரோஜா முகத்தின் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதில் பெரியளவில் பங்கு வகிக்கிறது. சருமம் பொலிவடைய ரோஜா இதழ்கள் நல்ல பயன் தரும்.
குங்குமப்பூ முகப்பொலிவு பெற மிக சிறந்த பொருள் ஆகும்.இவை முகப்பருக்களை போக்குவதிலும் நல்ல வல்லமை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் மற்றும் வலிமைடைய செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply