இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா

Loading...

இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமாஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே இக்காலத்தில் விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை.
அத்தகைய சூழலில்தான் நமக்கு இயற்கை வழிப்படி அழகை மேம்படுத்தும் முறைகள் நினைவிற்கு வரும், உங்களுக்கு 100 சதவீதம் பலன் தரும் இந்த இயற்கை அழகு குறிப்புகளை உபயோகப்படுத்தி என்றென்றும் அழகாகவும், இளமையாகவும் இருங்கள்.


கரும்புள்ளிகள் மறைய…

முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தோன்றி முகத்தை அசிங்கமாக்குகிறதா? எளிதான வழிகளில் அவற்றை நீக்கி விடலாம்.
கொத்துமல்லி இலையை அரைத்து விழுதாக்கி ஒரு நாளைக்கு 3 வேளை முகத்தில் தேய்த்து ஊறவிட்டு கழுவி வந்தால் விரைவில் கரும்புள்ளிகள் மறையும்.
அதே போல 1 தேக்கரண்டி கடலை எண்ணெயுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதனை முகத்தில் பூசி ஊற விட்டு கழுவி வந்தால் விரைவில் கரும்புள்ளிகள் மறையத் துவங்கும்.
ஏதே ஒரு நாள் செய்து விட்டுவிடாமல், கரும்புள்ளிகள் மறையும் வரை தொடர்ந்து செய்வது நல்லது.


சரும பாதிப்புகளைத் தவிர்க்க…

நீங்கள் குளிக்கும் நீரில் மாமர இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அந்த நீரில் குளிக்கவும். இதுபோன்று மா இலைகளைப் போட்டுக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு சரும நோய்களைத் தடுக்கலாம். ஏற்கனவே சரும பாதிப்பு இருந்தாலும் விரைவில் மறைந்துவிடும்.
சரும பாதிப்புகளைப் போக்குவதில் பூண்டிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு சரும பாதிப்புகளை போக்க ஒவ்வொரு வழியில் பூண்டைப் பயன்படுத்து வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பருக்களுக்கும் பூண்டு நல்ல மருந்தாக அமைகிறது. காதில் ஏற்படும் தொற்றுக் கிருமி பாதிப்புகளுக்கு பூண்டு எண்ணெய் சிறந்த மருந்தாக அமையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply