இறால் மஞ்சூரியன்

Loading...

இறால் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:

இறால் – 500 கிராம் சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – 2 பச்சை மிளகாய் – 2+3 (நறுக்கியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) பூண்டு – 2 பல் (நறுக்கியது) தக்காளி கெட்சப் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு
செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் முற்றிலும் வடியும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், முட்டை வெள்ளை கரு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை அந்த கலவையில் நனைத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள பச்சை மிளகாய், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளி கெட்சப், மிளகாய் சாஸ் மற்றும் சோயா சாஸை ஊற்றி, நன்கு கொதிக்கும் வரை கிளற வேண்டும். கலவையானது நன்கு கொதிக்கும் போது, அதோடு வினிகர் சேர்த்து 3-4 நிமிடம் கிளற வேண்டும். பின்பு அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை போட்டு, 6-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். ஒரு வேளை கிரேவி அதிக நீருடன் காணப்பட்டால், அப்போது சிறிது சோள மாவை சேர்த்து கிளறினால், கிரேவி சற்று கெட்டியாகிவிடும். பின் அதனை இறக்கிவிடலாம். இப்போது சுவையான இறால் மஞ்சூரியன் ரெடி!!! இதனை ப்ரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். குறிப்பு: வேண்டுமென்றால் இதனை சற்று கிரேவியாக சமைத்து, சாதத்துடன் சாப்பிட்டாலும், அருமையாக இருக்கம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply