இறால் மசாலா கறி

Loading...

இறால் மசாலா கறி
தேவையான பொருட்கள்

இறால் – அரைக்கிலோ
எண்ணெய்–கால் கப்
இஞ்சி இ வெ .பூண்டு விழுது –2 டீஸ்பூன்
தக்காளி – 2 கப்
குடை மிளகாய்–1
தேங்காய்த் துறுவல் –ஒரு கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெந்தயம்– அரைத் டீஸ்பூன்
மிளகு–ஒரு டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம்– ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை–சிறிது
கறிவேப்பிலை–சிறிது
உப்பு–தேவையான அளவு


செய்முறை

இறாலை தோல் நீங்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் , தக்காளி, குடைமிளகாயை பொடியாகக் நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் , கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தைப் பொட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, வெ.பூண்டு வி-ழுது சேர்த்து அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளியும் உப்பையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்குவதற்குள் தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு , விழுதாக அரைத்துக்கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கியதுடன் தேங்காய் விழுது சேர்த்து இணை்டு நிமிடங்களுக்கு வதக்கவும். சீரகம் , வெந்தயம் , மிளகு அனைத்தையும் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் பொடியாக்கி தனியாக வைக்கவும். பிறகு வதங்கிய வெங்காய கலவையில் இறால் சேர்த்து நன்கு கிளறி விடவும். இறாலுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்துக் கிளறவும். இறால் கலலையில் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு பிரட்டவும். இறால் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.இறால் மசாலா கறி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply