இரைப்பை வாதத்தினால் அவதி வேண்டாம் வீட்டிலிருந்தபடியே தீர்வுகள் பெறலாம்

Loading...

இரைப்பை வாதத்தினால் அவதி வேண்டாம் வீட்டிலிருந்தபடியே தீர்வுகள் பெறலாம்

இரைப்பை வாதம் (Gastroparesis) என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவானது,வயிற்றுப் பகுதியை அடைந்ததும்,அங்கே நொதிகளால் மசிக்கப்பட்டு,பின் சிறு குடலுக்கு அனுப்பப்படுகிறது. வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு தள்ளும் பணியை “வேகஸ் நெர்வ்” என்ற நரம்பு செய்கிறது. அந்த நரம்பு பாதிக்கப்பட்டாலோ, இரைப்பையில் அல்லது ஜீரண உறுப்பில் பிரச்சனை இருந்தாலோ நான் உண்ணும் உணவு வயிற்றிலேயே தங்கிவிடும்.
முழுவதும் ஜீரணம் ஆகாத நிலையில் சத்துக்களும் உடலுக்கு கிடைக்காமல் உடல் பலகீனம் ஆகும். இந்த பாதிப்பிற்கு பெயர் இரைப்பை வாதம். வேகஸ் நரம்பு பாதித்தாலோ, கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை வியாதியாலோ,ஹைபோ தைராய்டிஸம், ரேடியேஷன் தெரபி மற்றும் நரம்பு தொடர்பான வியாதிகளான”பார்கின்ஸன்”, “மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்( ) ஆகியவையால் இந்த கோளாறு வரலாம்.


இதன் அறிகுறி:-

மேல்வயிற்றில் வலி, சர்க்கரையின் அளவு மாறுபடுதல், பசியின்மை.வயிறு உப்புசம், எடை குறைதல்

தீர்வுகள் என்ன?


ப்ரோ பயோடிக் உணவுகள்:

ப்ரோ பயோடிக் உணவுகள் உடலுக்கு நன்மை விளைவிக்கும் நல்ல நுண்ணுயிர்கள் ஆகும். அவை உண்ணும் உணவை பிரித்து சத்துக்களை ரத்தம் உறிஞ்ச வழி செய்கின்றன. ப்ரோ பயோடிக் நுன்ணுயிர்கள் யோகார்ட், மோர், புளிப்பான ஊறுகாய் ஆகியவற்றில் உள்ளது. மருத்துவரின் பரிந்துரையிலும் ப்ரோ பயோடிக் உணவுகளை கேட்டு பெறலாம்.


சோற்றுக் கத்தாழை:

சோற்றுக் கத்தாழை ஜீரணத்தை தூண்டுகிறது, தடைப்படும் குடல் இயக்கத்தை சீர் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் சோற்றுக் கத்தாழை ஜூஸ் குடித்தால், வயிறு வீக்கத்தினை குறைக்கும். பசி எடுக்க உதவிபுரிகிறது.


சோற்றுக் கத்தாழை ஜூஸ் செய்யும் முறை:

இரு ஸ்பூன் அளவுள்ள சோற்றுக் கத்தாழையை நான்கைந்து முறை நன்கு கழுவி, அதனுடன் ஒரு கப் நீர் அல்லது ஆரஞ்சு சாறுடன் நன்றாக கலந்து குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் குடிக்கலாம்.


குறிப்பு:
ஒரு நாளைக்கு சோற்றுக் கத்தாழை 2 ஸ்பூன் அளவிற்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.


ஆப்பிள் சைடர் வினிகர்:-

டைப் 1 -டயாபடிஸ் கூடிய இரைப்பை வாதத்திற்கு ஆப்பிள் சைடர் விகினக்ர் அருமையான தீர்வு என BMC Gastroenterology இதழ் வெளியிட்டுள்ளது.
ஒரு டம்ளர் நீரில், ஒரு ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்கவும்.சாப்பிடுவதற்கு 20 நிமிடங்கள் முன்னர் இதை குடித்தால் அதிக பயன் தரும்.


விட்டமின் D:

விட்டமின் D, ஜீரண உறுப்புக்கள் தடையில்லாமல் வேலை செய்ய இன்றியமையாததாகும். 2013 ஆம் ஆண்டு,Hormone and Metabolic Research வெளியிட்ட ஆய்வில், இரைப்பை வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள், தொடர்ந்து விட்டமின் D யை எடுத்துக் கொள்ளும்போது, ஜீரண உறுப்புக்கள் சீர் அடைவதாக தெரிய வந்துள்ளது. அதிகாலையில் வரும் சூரிய ஒளியில் பதினைந்து நிமிடங்கள் நின்றால் போதுமானது. மேலும் விட்டமின் D நிறைந்த உணவுகளும் மாத்திரைகளும் உட்கொள்ள வேண்டும்.


அக்குப் பஞ்சர், அக்கு ப்ரஷர்:

இந்த இரு முறைகளாலும், நரம்பு மண்டலம் நன்றாக தூண்டப்படுகிறது. ரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜன் கடத்தப்பட்டு உடலை முழுவதுமாக சீர் செய்கிறது. மணிக்கட்டில் மற்றும் முட்டிக்கு கீழே அக்கு ப்ரஷர் தரும் போது வயிற்று சம்பந்தமான நோயிகளுக்கு தீர்வு காணலாம்.
முக்கியமாக சர்க்கரை வியாதி கூடிய இரைப்பை வாதத்திற்கு இவ்விரு முறைகளும் நல்ல ரிசல்ட் கிடைப்பதாக 2004 ல் Traditional Chinese Medicine என்னும் இதழ் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.


ஆழமான மூச்சுப் பயிற்சி:

ஆழமான மூச்சுப் பயிற்சி செய்யும் போது வேகஸ் நரம்பு தூண்டப்படுகிறது.அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.


தேங்காய் எண்ணெய்:

தேங்காய் என்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம் உணவினை எளிதில் செரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுகிறது. ஒரு ஸ்பூன் தேங்காய் என்ணெயை கால் கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து குடிக்கவும். அல்லது தேநீரில் கலந்து குடிப்பதும் நலம்.பசியை தூண்டவல்லது.


இஞ்சி:

இரைப்பை வாதத்தில் என்சைமகள் தூண்டப்படாமல் சும்மா இருக்கும். என்சைம்கள் தூண்டினால்தான் மற்ற உறுப்புக்கள் வேலை செய்யும். இஞ்சி ஜீரண மண்டலத்தை தூண்டி, பசியை உருவாக்குவதில் கிங் என்றே சொல்லலாம். உடலில் என்சைம்கள் சீக்கிரம் சுரக்க வழிவகுக்கிறது.


மிளகுக் கீரை:

மிளகுக் கீரை வாந்தி மற்றும் குமட்டலை சரி செய்யும். ஜீரண சக்தியை தூண்டும். மிளகு டீ செய்து குடிப்பது குமட்டலை நிற்க வழி செய்யும்.


செய்முறை:

காய்ந்த மிளகுக் கீரை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடிக்கலாம்.


இரைப்பை வாதம் குறைய மேலும் சில குறிப்புகள்:

மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக 5 வேளையாக பிரித்து,சிறிது சிறிதாக உண்ணலாம்.
பசியை தூண்டும் உணவுகளே சிறந்தது.
நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது.
எண்ணெய் பதார்த்தங்களை தொடக் கூடாது.
மசாலா உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்க்கக் கூடாது.
இரைப்பை வாதத்தினை வீட்டில் இருந்தபடியே முறையான உணவுகளை உண்டு சரி செய்து ஆரோக்கியமாக வாழலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply