இரைப்பை அழற்சியால் அவதிப்படுகிறீர்களா இதோ எளிய வீட்டு வைத்தியங்கள்

Loading...

இரைப்பை அழற்சியால் அவதிப்படுகிறீர்களா இதோ எளிய வீட்டு வைத்தியங்கள்நிறைய மசாலா உணவுகளையும், துரித உணவுகளும் , கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் உங்கள் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் தடுமாற்றமே கேஸ்ட்ரைடிஸ் . அமில சுரப்பு அதிகமாகி உங்கள் குடலினை பதம் பார்க்கும்.
இந்த பிரச்சனை வந்துவிட்டால் அவ்வளவுதான். நிம்மதியாய் உங்களுக்கு பிடித்தமான உணவினை தொடக் கூட முடியாது. அப்படியே மீறி சாப்பிட்டால், அன்றிரவு தூங்க முடியாதபடி வயிற்றில் தொல்லை தரும்.

கேஸ்ட்ரைடிஸ் அறிகுறி என்ன?

வயிறு எரிச்சல், வயிறு உப்புசம், அடிக்கடி விக்கல், வாந்தி, குமட்டல் ஆகியவைகளே அதன் அறிகுறிகளாகும். இவற்றினை சரியான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே சரி செய்ய முடியும்.
என்னென்ன உணவுகள் கேஸ்ட்ரைடிஸ் வந்தால் உகந்தது என பார்க்கலாம்:

உருளைக் கிழங்கு :

வெட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளை நீரில் கலந்து ஜூஸ் போலச் ஆக்கி பருகலாம். இது வயிற்றினை சுத்தப்படுத்துகிறது. வயிற்றில் அமிலத்தன்மையை கட்டுபடுத்துகிறது.

பப்பாளி:

பப்பாளியில் பீட்டா கரோட்டின் உள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றில் அமிலத் தன்மையை குறைக்கும். தினமும் சாப்பிட்டால் கேஸ்ட்ரைடிஸ் வராது.

பெருஞ்சீரகம் :

உணவு சாப்பிட்டவுடன், சிறிது பெருஞ்சீரகத்தை வாணிலியில் வெறுமனே வதக்கி சாப்பிட்டால் வயிறு உப்புசம்,எரிச்சல் வராது. நீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டியும் குடிக்கலாம்.

அன்னாசி:

அன்னாசியில் ப்ரோமெலைன் என்கின்ற என்சைம் உள்ளது. அது உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும். தினமும் அன்னாசி பழம் சில துண்டுகள் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிறு எரிச்சல் கட்டுபடும்.

இளநீர் :

இள நீரில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதோடு அது அமிலத்தன்மையை குறைக்கும். தினமும் இளநீரைக் குடித்தால், வயிற்றில் அதிகமாய் அமிலம் சுரப்பது மட்டுப்படும்.

இஞ்சி :

இஞ்சியும் வயிற்றில் அமிலத்னமையை சமன்படுத்தும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். இஞ்சி டீ குடியுங்கள். உணவில் இஞ்சியை தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிகமாக நீர் உட்கொள்ள வேண்டும் :

கேஸ்ட்ரைடிஸின் போது வயிற்றில் அதிகம் அமிலம் சுரக்கும். அதற்கு முக்கியத் தீர்வு அதிகமாய் நீர் குடித்தலாகும். அடிக்கடி போதிய இடைவெளியில் நீர் குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தம்ளார் நீருடன், இரு துளி எலுமிச்சை சாறு (அல்லது தேன்), ஒரு சிட்டிகைக்கும் குறைவாக உப்பு சேர்த்து குடித்தால் அன்று முழுவதும் உங்களுக்கு கேஸ்ட்ரைடிஸ் தொல்லை இருக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply