இமெயில் வசதியை வழங்கும் டுவிட்டர்

Loading...

இமெயில் வசதியை வழங்கும் டுவிட்டர்டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் உலக அளவில் உள்ளனர். இந்த டுவிட்டரில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களைப் பதிவு செய்வர். அந்த கருத்துக்களையும் மற்றும் எண்ணங்களையும் பார்ப்போர் அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் தங்களின் எண்ணங்களை அதில் பகிர்வு செய்வர். இதுவரை டுவிட்டர் மூலம் இமெயில் அனுப்பும் வசதி இல்லை.

ஆனால் தற்போது டுவிட்டரில் இமெயில் அனுப்பும் வசதியும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டுவிட்டர் மூலம் இமெயில் அனுப்பலாம் மற்றும் இமெயில்களைப் பெறலாம். அதுபோல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான மேம்படுத்தப்பட்ட டுவிட்டர் சேர்ச் அப்ளிகேசன்களையும் டுவிட்டர் தற்போது வழங்கி இருக்கிறது.

டுவிட்டர்.காம் மூலம் டுவிட்டர் வாடிக்கையாளர்கள் இன்னும் சில வாரங்களில் இமெயில்களை அனுப்பலாம். இதன் மூலம் டுவிட்டரில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் இமையில் அனுப்ப முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply